வீட்டில் இருந்து அதை கற்றுக் கொண்டேன்!! -மனம் திறக்கிறார் மதுமிதா-

ஆசிரியர் - Editor II
வீட்டில் இருந்து அதை கற்றுக் கொண்டேன்!! -மனம் திறக்கிறார் மதுமிதா-

பிரபல நடிகை மதுமிதா கொரோனா வைரஸ் தொற்றால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்து சில விடயங்களை கற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மதுமிதா. இதைத் தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து  வருகிறார்.

கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருக்கும் மதுமிதா, பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன். எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Radio