பொலிஸார் மீது சந்தேகமா..? என்னிடம் நேரடியாக கூறுங்கள், நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை..
இலங்கையில் போதைவஸ்த்து பாவனையை கட்டுப்படுத்த தம்மிடம் தகவல் வழங்குமாறு ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கின்றார்.
பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டங்கள் சிலவற்றில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டாறு கூறியுள்ளார்.
போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட இளைஞர் சமுதாயத்தை பாதுகாக்குமாறும், பொலிஸாரிடம் தகவல் வழங்கியும் பயனில்லை என சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி நேரடியாக தம்மிடம் அந்த தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.