SuperTopAds

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை..! எந்த நேரத்திலும் சமூக மட்டத்திலிருந்து கொரோனா நோயாளி அடையாளம் காணப்படலாம். அவதானம்..

ஆசிரியர் - Editor I
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை..! எந்த நேரத்திலும் சமூக மட்டத்திலிருந்து கொரோனா நோயாளி அடையாளம் காணப்படலாம். அவதானம்..

இலங்கையில் இன்றும் கொரோனா பரவல் ஆபத்து நீக்கவில்லை. என எச்சரித்திருக்கும் தொற்றுநோயியல் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர எந்த சந்தர்ப்பத்திலும் சமூகத்திலிருந்து தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்படலாம் என எச்சரித்துள்ளார். 

இதனால் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் 

வைரஸ் கட்டுப்படுத்திய நிலைமை ஒன்று இலங்கையில் காணப்படுகிறது. ஆனாலும் சுகாதாரத்துறையிடமிருந்து தப்பித்த தொற்றுள்ளவர்கள் எந்தவிதமான நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது சமூகத்திற்குள் இருக்கலாம். 

ஆகவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். அவர் கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.