தப்பி ஓடிய கொரோனா நோயாளி சமூக தொற்றை ஏற்படுத்திவிட்டாரா..? மீண்டும்..மீண்டும் பொய் கூறும் குறித்த நோயாளி, இராணுவ தளபதி விளக்கம்..
தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளியினால் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமா? என பீதியடையவேண்டாம். என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பதிலளித்துள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, அப்படி கொரோனா தொற்று அந்த நபரிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்றியிருக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
எனினும் குறித்த நோயாளர் சில போலி தகவல்களை அளித்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் வைத்தியசாலையின் அருகில் உள்ள வீடொன்றில் நுழைந்து ஆடைகளை திருடி மாற்றிக்கொண்டு அங்கிருந்த மிதி வண்டியை திருடி
அதனூடாக புறக்கோட்டையை வந்தடைந்துள்ளார் என விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். குறித்த நோயாளி ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து கால்நடையாக கொழும்பு புறக்கோட்டை வரை சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் புறக்கோட்டை பிரதான வீதியிலிருந்து முச்சக்கர வண்டி ஊடாக கொழும்புதேசிய வைத்தியசாலைக்கு வந்துள்ளார். இதனையடுத்து கைதாகிய கொரோனா நோயாளி இன்று மீண்டும் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளார்.
என்று தெரிவித்த இராணுவத் தளபதி, நோயாளரை ஏற்றிவந்த முச்சக்கர வண்டியின் சாரதியை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.