பாடசாலை மாணவர்களின் கற்பித்தலக்காக உருவாக்கப்பட்ட இணையதளங்களை ஹக் செய்து பெண் ஆசிரியர்களுடன் காவாலிச் சேட்டை..! அதிபர், ஆசிரியர்கள் ஆதங்கம்..
கொரோனா இடர்காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் இணையம் மற்றும் வட்சப், வைபர் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், குறித்த இணையம், வட்சப், வைபர் ஆகியவற்றை ஹக் செய்த காவாலி கும்பல் பெண் அதிபர், ஆசிரியர்களுடன் தகாதமுறையில் நடப்பதாக அதிபர், ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
*21×0765628297# என்ற இலக்கத்தை பதியுமாறு சில பாடசாலைகளின் அதிபர்களை தந்திரோபாயமாக செயற்படுத்தும் காவாலிகள் அப் பாடசாலையின் வட்சப் வைபர் குறூப்புக்குள் உள்நுழைந்து பெண் ஆசிரியர்களின் தொலைத்தொடர்பு இலக்கங்களை அறிந்து பக்கங்களுக்குள் ஊடுருவுகின்றன.
குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் தகவல் அனுப்புவதை போல் தகாத படங்களையும் செய்திகளையும் ஆசிரியர்களின் வாட்சப் வைபார் தளங்களுக்கு அனுப்பப்படுகிறது. குறித்த சம்பவம் பருத்தித்துறை கிளிநொச்சி வவுனியா பூநகரி பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளது. இதனால் அதிபர்கள் ஆசிரியர்கள்
மனநீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே வடமாகாணத்திலுள்ள பாடசாலை அதிபர்களுக்கு யாராவது தொடர்புகொண்டு தமது தொலைபேசிகளில் இரகசிய பதிவிறக்கங்கள் பதியுமாறு கோரினாள் அதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வடமாகாண அதிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.