தோட்ட காவலுக்கு சென்ற 17 வயது மாணவன் நீர் குழியில் விழுந்து மரணம்..!
நீர் நிறைந்த குழியில் தவறி விழுந்த 17 வயதான மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் நேற்று காலை புத்தளம் சாலியாவெ புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நிலக்கடலை தோட்டதை யானைகளிடமிருந்து பாதுகாக்கச் சென்ற தனது தாத்தா மற்றும் மாமா ஆகியோருடன் குறித்த மாணவனும் சென்றுள்ளார் எனவும்
அதன்போது அங்கிருந்த நீர்க்குழி ஒன்றில் முகத்தைக் கழுவ முயன்றபோது அதில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த குறித்த மாணவன் பல ஆண்டுகளாக வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சாலியாவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.