இராவணனின் புட்பக விமானத்தின் மூல தகவல்களை கேட்டு விளம்பரம்..! இராவணனை சிங்களவனாக்க முயற்சி பணத்திற்காக தகவல்களை வழங்கவேண்டாம் எதிர்ப்பு..

ஆசிரியர் - Editor I
இராவணனின் புட்பக விமானத்தின் மூல தகவல்களை கேட்டு விளம்பரம்..! இராவணனை சிங்களவனாக்க முயற்சி பணத்திற்காக தகவல்களை வழங்கவேண்டாம் எதிர்ப்பு..

இராவணன் பயன்படுத்தியதாக கூறப்படும் புட்பக விமானத்தை பற்றிய மூல தகவல்கள் இருப்பின் தமக்கு வழங்குமாறுகோரி சிவில் விமான சேவைகள் அதிகாரசபை ஊடகங்களில் விளம்பரம் செய்துள்ளது. 

“இராவணன் மற்றும் விமான ஆதிபத்தியத்தில் நாம் இழந்த மரபு” என்ற தலைப்பில் ஆய்வு தொடங்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான மூல தகவல்களை வழங்குமாறும் கேட்கப்பட்டிருக்கின்றது. 

இவற்றுக்கு தேவைப்படுகின்ற இராவணன் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், நூல்கள் ஆதாரங்கள் என்பவற்றை கோரியுள்ளது சிவில் விமான சேவை அதிகார சபை. 

இதனை 2020 யூலை 31 க்கு முன்னர் 0766317110 என்கிற தொலைபேசி இலக்கத்தின் மூலமோ mgrrdp@caa.lk என்கிற மின்னஞ்சல் மூலமோ அல்லது குறிப்பிட்ட விலாசத்துடன் தொடர்பு கொண்டோ அறியத்தந்தால் 

கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதேவேளை அரசாங்கத்தின் இந்த முயற்சி இராவணனை சிங்களவனாக்கும் முயற்சியே எனவும் முக்கிய மூல தகவல்கள் இருப்பின் 

அவற்றை பாதுகாக்கவேண்டும். பணத்திற்காக அதனை விற்றுவிடக்கூடாது என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுப்பபட்டு வருகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு