இலங்கை ஆபத்துக்கு நெருக்கமாக பயணித்துக் கொண்டிருக்கிறது..! மருத்துவர்களாக கவலையடைகிறோம் விசேட மருத்துவர்கள் சங்கம் கருத்து..
இலங்கையில் கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் 2ம் அலை உருவாவதற்கான இறுதிக்கட்டத்திலேயே இலங்கை உள்ளதாக விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் லலந்த ரணசிங்க மேலும் கூறுகையில், நாட்டின் நிலைமை தொடர்பில் விசேட வைத்தியர் என்ற ரீதியில் வருத்தமடைவதாக,
இன்று ஏற்பட்டுள்ள நிலைமை எந்த திசையில் திரும்பும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொரோனவின் ஆரம்ப காலப்பகுதியில் இலங்கை முகம் கொடுத்த முறை மிகவும் சிறப்பானதாகும்.
அதனை குறித்து திருப்தி அடைய முடியும். அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தவறான விழிப்புணர்வு காரணமாக மக்கள் குழப்பமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளதாக நூற்றுக்கு நூறு வீதம் கூற முடியாதென்ற போதிலும் அதற்கு அருகில் நெருங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளர்.