கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்த 6 பரிந்துரைகள்..! மக்கள் நடமாட்டத்தை முடிந்தளவு குறைக்கவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வற்புறுத்தல்...
இலங்கையில் கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்துவதற்கு 6 முக்கிய பரிந்துரைகளை இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.
மேலும் தற்போது நாட்டில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் இல்லை என்பதால் இயன்றவரை அதனை பரிசீலிக்க வேண்டும்.
அவ்வாறான செயற்பாட்டினால் குழுக்களாக நோயாளிகள் உருவாகுவதும் இரண்டாவது அலை ஏற்படுவதையும் தடுக்க முடியும் என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவையாற்றுகின்ற அலுவலர்கள் மூலமாக இராஜாங்கனை பிரதேசத்தில் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கு அப்பால் அந்த நிலையத்தில் வேலை செய்கின்ற அலுவலர்கள் மற்றும் கைதிகளை சந்திப்பதற்குச் சென்ற ஆபத்தான பகுதிகள் சரியாக இனங்காணப்பட வேண்டும்.
அந்த பகுதிகளில் தொற்றாளர்களுடன் ஏனையோர் தொடர்புபட்டிருந்தால் குழுக்களாக நோயாளிகள் இனங்காணப்படும் அபாயம் உண்டு.
அவ்வாறு நோயாளிகளை இனங்காண்பதற்கு முன்னர் நோயாளிகளைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையனித்தல் மூலம் குழுக்களாக உருவாகுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
அவ்வாறு நோயாளர்களை விரைவாக இனங்காணபதற்கு பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் உள்ளடக்கப்படும் வகையில் விஞ்ஞானபூர்வமாக மக்களை ஒழுங்காக தெரிவு செய்து பரிசோதனை செய்வது அத்தியாவசியமானது.
ஆனால் இன்று வரை இலங்கையில் செய்யப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
கடந்த சில வாரங்களுக்கு நாளொன்றில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 2000 ஐ விட குறைவாகும். தொற்று நோய்ப்பிரிவினால் சுகாதார அமைச்சிற்கு கையளிக்கப்பட்ட அறிக்கையின் படி
மாதமொன்றுக்கு 68 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறெனில் நாளொன்றுக்கு 2500 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் இல்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாடுமுழுவதும் இயன்றவரை நடமாட்டத்தை பரிசீலிக்க வேண்டும்.
அவ்வாறான செயற்பாட்டினால் இவ்வாறு குழுக்களாக நோயாளிகள் உருவாகுவதும் இரண்டாவது அலை ஏற்படுவதையும் தடுக்க முடியும். சுகாதார அமைச்சின் தொழிநுட்ப குழுவினால்
சரியாக எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரமே ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி செயலணிக்கும் பிழையின்றி முடிவுகளை எடுக்க முடியும்.
கொவிட்-19 இரண்டாவது அலையைத் தடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 6 பரிந்துரைகளை முன்வைக்கின்றது.
அவையாவன, நோயாளிகளுடன் தொடர்புபட்டவர்களை எதுவித தவறுகளும் இன்றி இனங்காணும் பொருட்டு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊழியர்களையும்
இராணுவ புலனாய்வு உறுப்பினர்களையும் வினைத்திறனாகப் பயன்படுத்துதல் வேண்டும்.அ த்தோடு நாளொன்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதோடு
நோயாளர்களை மிகத்துரிதமாக பரிசோதனை செய்வதோடு அடிக்கடி பி.சி.ஆர். பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நோயாளிகள் இனங்கானப்படும் பிரதேசங்களை அறிந்து அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அப்பகுதிகளை முடக்குதல் அவசியமாகும்.
முழு நாடும் உள்ளடங்கும் வகையில் விஞ்ஞானபூர்வமான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுத்து இலங்கையில் நோயின் பரம்பலை அறிந்து தெளிவூட்டுதல்.
கடற்படை முகாம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் குழுக்களாக உருவாகியுள்ள நோயாளிகளின் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் பாடத்தினூடாக ஆபத்தான பகுதியில் உள்ள
வேலைத்தளங்களில் வேலையாட்களை பகுதியாக பிரித்து பயன்படுத்துவதன் மூலம் குழுக்களாக நோயாளிகள் உருவாகுவதைத் தவிர்க்க முடியும்.