SuperTopAds

வீட்டுக்கு வீடு வரவுள்ள வாக்குப்பெட்டிகள்!

ஆசிரியர் - Admin
வீட்டுக்கு வீடு வரவுள்ள வாக்குப்பெட்டிகள்!

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்க, வீடு வீடாக வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை பொதுவான வாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்து வர முடியாது. அவர்களுக்காக பிறிதொரு வாக்களிப்பு நிலையத்தை ஸ்தாபிக்க எண்ணியுள்ளளோம்.

ராஜாங்கனையில் இரு பிரத்தியேக இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவ்வாறு இல்லாவிடின் வாக்குப் பெட்டியை எடுத்துக் கொண்டு வீடு வீடாக செல்வோம்.

இதற்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்டவர்களை வாக்களிக்க தேர்தல் நடைபெறும் தினத்தன்று மாலை 4 மணிக்கும் 5 மணிக்கும் இடையிலான காலப்பகுதியில் சாதாரண வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய தனிமைப்படுத்தப்பட்டவர்களை அவ்வாறு வெளியில் அழைத்துவர முடியாது எனவும் கூறினார்.

வாக்கு பெட்டி வீடு வீடாக எடுத்துச் செல்லப்படுமானால் கள்ள வாக்களிக்க சந்தர்ப்பம் உள்ளதா? என தொகுப்பாளர் ஆணையாளரிடம் வினவினார்.

இதற்கு பதிலளித்த ஆணையாளர் "அவ்வாறு வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்வது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதுவும் இல்லை". "ஆனால் இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாட வேண்டும்". என்றார்.