தாயின் ஒத்துழைப்புடன் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட 10 வயது சிறுமி..! பாம்பு தீண்டியதாக கூறி பொய்கூறியது உட்பட உண்மைகளை கண்டுபிடித்த பொலிஸ்..
பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பாம்பு தீண்டியதாக கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி தாயின் காதலனால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டமையினை பொலிஸார் கண்டுபிடித்துள்ளார்.
புத்தளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 10 வயதான சிறுமிக்கு பாம்பு தீண்டியதாக கூறி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நடந்த விசாரணையில் குறித்த சிறுமி
தாயின் கள்ள காதலனால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிறுமி வைத்தியசாலையிலேயே மரணமடைந்துள்ளார்.