SuperTopAds

இலங்கையின் நிலமை மோசமடைகிறது..! மாகாணங்களை முடக்கும் தீர்மானத்தையாவது எடுங்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் நிலமை மோசமடைகிறது..! மாகாணங்களை முடக்கும் தீர்மானத்தையாவது எடுங்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..

இலங்கையில் தற்போது கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதையும், நோய் பரவும் வேகத்தையும் கவனத்தில் எடுக்கும்போது நிலமை மிகமோசமாக உள்ளமையினை உணர்ந்து கொள்ளகூடியதாக இருக்கின்றது. 

ஒட்டுமொத்தமாக நாட்டை முடக்காமல் தொற்று அபாயம் உள்ள மாகாணங்களை முடக்குவதன் ஊடாக பரவலை தடுக்கலாம். என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஷெனால் பெர்னான்டோ கூறியிருக்கின்றார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்குபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தற்போது நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதையும் நோய் பரவுவதையும் 

கவனத்திற்கொள்ளும்போது நிலைமை அன்று இருந்ததை விடவும் பாரதூரமானதாக உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்தார். பொது சுகாதாரம் தொடர்பில் ஆபத்தான நிலையில் நாம் உள்ளோம். 

சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் எடுக்கும் சரியான தீர்மானங்களிலேயே எதிர்கால நிலை தங்கியுள்ளது. அதற்கு தேவையான அரசியல் ஒத்துழைப்பு கிடைத்துள்ள தருணத்தில்,

 சுகாதார அமைச்சு சரியான தீர்மானங்களை மேற்கொள்ளாவிட்டால் இந்த நிலைமை பாரதூரமாக அமையலாம். தொழில்நுட்பத் தீர்மானங்களை எடுக்கும் குழுவினர் அடிக்கடி கூடி இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும்.

என ஷெனால் பெர்னாண்டோ குறிப்பிட்டார். வட மாகாணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களை சந்தித்தவர்கள் பதிவாகியுள்ளனர். ஒவ்வொரு மாகாணங்களிலும் நிலவும் அபாயம் மாறுபட்டதாகும். 

சிறு பிரிவுகளைத் தடுக்க நாம் பிராந்திய முடக்கத்தை மேற்கொள்ள முடியும். அவ்வாறு செய்தால் அதன் தாக்கம் குறைவடையும். தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாட்டிற்கே இதன்மூலம் ஏற்படுகின்ற தாக்கத்தை தவிர்க்க முடியும்.

என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித்த அளுத்கே குறிப்பிட்டார். இதேவேளை, கொரோனா தொற்று தொடர்பில் தவறான கருத்துக்கள் சமூகமயப்படுத்தப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நவீன் டி சில்வா கோரிக்கை விடுத்தார். தவறான கருத்துக்கள் பரவுவது இரண்டாம் அலை ஏற்படுவதைத் தடுப்பதற்கு தடையாக உள்ளதாக அவர் கூறினார். தகவல்களை வழங்கும் தரப்பினர் 

முறையாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காததால், பிழையான தகவல்கள் சமூகமயப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளதுஎன நவீன் டி சில்வா குறிப்பிட்டார்.