SuperTopAds

நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..! பேராபத்தை குறைத்து மதிப்பிடவேண்டாம் எனவும் அறிவுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..! பேராபத்தை குறைத்து மதிப்பிடவேண்டாம் எனவும் அறிவுறுத்தல்..

பொதுமக்கள் தேவையற்று வெளியில் நடமாடுவதால் தற்போது எழுந்துள்ள கொரோனா தொற்று சமூக தொற்றாக மாற்றமடையுமாக இருந்தால், வைத்தியசாலைகள், வைத்தியர்கள், சிகிச்சை வசதிகள் பற்றாக்குறை உருவாகும். அதனால் பலர் மரணிகும் அபாயம் எழும். 

ஆகவே அநாவசியமாக பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்த்துக்கொள்வதுடன், மிகவும் அத்தியாவசிய தேவைகள் இருப்பின் மாத்திரம் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வெளியில் செல்லுமாறு சுகாதார அமைச்சின் 

சிரேஷ்ட தொற்றுநோயியல் வைத்தியநிபுணர் சுதத் சமரவீர நாட்டுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவதுஅதிகளவானோர் நீண்டகாலத்திற்கு ஒன்றாகத் தங்கியிருக்கின்ற இடங்களில் (புனர்வாழ்வு நிலையங்கள், முகாம்கள்) 

எதிர்வரும் காலத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளங்காணப்பட்டபோது 

நாடு முழுவதுமாக முடக்கப்பட்டிருந்தது. எனவே வெலிசறை முகாமிலிருந்த கடற்படை வீரர்களின் வீடுகளுக்குச் சென்று, அங்குள்ளவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துத் தொற்றாளர்களைக் கண்டறிந்த போது, 

அப்பகுதிகளில் மக்களின் நடமாட்டம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்பட்டது. எனவே குறிப்பிட்டளவிற்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியுமாக இருந்தது.ஆனால் தற்போது கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல் நிலையத்தில் 

ஆலோசகர்களாகப் பணியாற்றியவர்கள் அவர்களது வீடுகளுக்குச் சென்ற பின்னர், அங்கிருந்து மேலும் பல்வேறு இடங்களுக்குச் சென்றிருப்பதைக் அவதானிக்கமுடிகிறது. எனவே அவர்களிடமிருந்து வைரஸ் மேலும் பலருக்குப் பரவக்கூடிய வாய்ப்பு இங்குள்ளது. 

அதன் காரணமாக தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஆகவே கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய அவதானநிலை மிகவும் உயர்வாகக் காணப்படுகிறது.

எனவே மக்கள் அநாவசியமாக வெளிப்பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மிகவும் அத்தியாவசிய தேவைகள் இருப்பின் மாத்திரம் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வெளியில் செல்லுங்கள்.

ந்தக்காடு புனர்வாழ்வளித்தல் நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் மாத்திரமே இராஜங்கனைக்கு வருகை தந்திருக்கிறார். எனினும் அதனையடுத்து 16 பேர் வரையில் தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டிருக்கிறது. 

எனவே இது சமூகப்பரவலாக மாற்றமடைந்தால் இவ்வாறானதொரு நிலைமை ஒட்டுமொத்த நாட்டிலும் ஏற்படும்.