மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் கட்டணங்களுக்கு சலுகை..! புதிய அறிவிப்பை வெளியிட்டது மின்சாரசபை..
மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் கட்டணங்களுக்கு அரசாங்கத்தினால் சலுகை வழங்கப்பட்டிருக்கின்றது.
குறித்த மாதங்களுக்கான கட்டணமாக பெப்ரவரி மாதத்திற்குரிய மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தை செலுத்துவதற்கு 2 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுமென மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மார்ச் , ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை ஏற்கனவே செலுத்தியிருப்பின்,
அதற்குரிய பணத்தை மீள வழங்கவோ அல்லது எதிர்வரும் மாதங்களுக்குரிய மின்சாரப் பட்டியலில் குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படுமென
மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.