இலங்கையில் கொரோனா 2ம் அலை ஆரம்பம்..! பேராபத்தை தடுக்க நடவடிக்கை எடுங்கள், இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடிதம்..
இலங்கையில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் உணரப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் இரண்டாவது சுற்று கொரோனா வைரஸ் குறித்த கடும் ஆபத்தை உருவாக்கியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் அனுபவங்களை வைத்து பார்க்கும்போது முதலில் வெற்றிகரமாக கொரோனாவை கட்டுப்படுத்திய நாடுகளில் கூட இரண்டாவது சுற்று வழமையான விடயமாக காணப்படுகின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.