519 பேருக்கு தொற்று, 800 பேருக்கு மேல் தனிமைப்படுத்தலில்..! மிரட்டும் கந்தகாடு, இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்..

ஆசிரியர் - Editor I
519 பேருக்கு தொற்று, 800 பேருக்கு மேல் தனிமைப்படுத்தலில்..! மிரட்டும் கந்தகாடு, இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்..

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்புடைய சுமார் 519 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 800 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தில் உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இவர்களில் 419 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலும், 11 பேர் சேனாபுரா மறுவாழ்வு மையத்திலும் உள்ள கைதிகள் எனவும், 63 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையதில் பணிபரியும் ஊழியர்கள் எனவும் மேலும் 16 பேர் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரை தொடந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்கான நிலையில் இனம் காணப்பட்டனர் இதனையடுத்து அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் உள்ளடங்களாக இதுவரை 519 பேருக்கு 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 800 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் இவ் எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்டுகின்றது. இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 29 கொரோனா தொற்றாளையடுத்து 

மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,646 ஆக உயர்வடைந்துள்ளது.கொரோனா 654 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 112 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். 

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,981 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும் பதிவாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு