சுமார் 492 பேருக்கு கொரோனா..! இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்..
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்புகளை பேணிய 492 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார்.
இன்று கொரோனா தடுப்பு செயலணியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்தார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 429 கைதிகள், அங்கு பணியாற்றும் 47 ஊழியர்கள்
மற்றும் கைதிகளுடன் தொடர்புடைய 16 நபர்கள் என 492 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர் கந்தகாடு மையத்தின் பணியாளராவார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் விவரம் முதலில் சுகாதார அமைச்சிடம் பதிவு செய்யப்படுகின்றன. பின்னர் அப்பகுதியின் பொது சுகாதார பரிசோதகர்
மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி ஆகியோருக்கும் தேவையான நடவடிக்கைகளுக்கு அறிவிக்கப்படுகின்றது என்றும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.