மீண்டும் இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா..! மேலும் 87 பேருக்கு தொற்று உறுதி, மொத்தம் 339ஆக உயர்வு..
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 87 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், மொத்தம் 339 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க கூறியுள்ளார்.
இதன்மூலம் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்று மாலைவரை 339 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதியுடன் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தவர்களுக்கே
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வெலிக்கடை கைதியுடன் மூன்று மாதங்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் மற்றும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அடங்கலாக
283 பேருக்கு பிசிஆர் பரிசோதனையின் மூலம் இன்று கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.