ஜனாதிபதியின் எழுத்துமூல உத்தரவு..! கலக்கத்தில் ஆழுங்கட்சி வேட்பாளர்கள், அரச அதிகாரிகள்..
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த கூடாதென பணித்துள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்புதுறை, அரச நிறுவனங்கள், கூட்டத்தாபனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடகூடாது என பணித்திருப்பதுடன்,
அரச ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதை அறிந்தாலோ, ஜனாதிபதியின் புகைப்படத்தை பயன்படுத்தினாலோ அதனை தமது கவனத்திற்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி தேர்தல் ஆணைக்குழுவுக்கும் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
தற்போது சில வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படம் அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரை பயன்படுத்துவதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கமையவே
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரினால் கடிதமொன்று அனுப்பபட்டுள்ளது, இதனடிப்படையில் ஆளுனர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள்
மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு இது தெர்டர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது,
அத்துடன் ஜனாதிபதியின் இந்த பணிப்புரை தொடர்பில் அரச ஊழியர்களை கண்காணிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பிரதான அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் கடிதமொன்று அனுப்பபட்டுள்ளது,