முகநூலில் படத்தை பதிவேற்றிய இளைஞனிடம் ரிஐடியினர் விசாரணை!

ஆசிரியர் - Admin
முகநூலில் படத்தை பதிவேற்றிய இளைஞனிடம் ரிஐடியினர் விசாரணை!

ஆயுதம் தாங்கிய ஒளிபடத்தை முகநூலில் பதிவேற்றிய வவுனியா இளைஞன் ஒருவர், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால், விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள, குறித்த இளைஞன், வவுனியாவிலுள்ள அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அணித்தலைவரின் ஆயுதம் தாக்கிய புகைப்படம் ஒன்றை தனது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்ததாகவும், அதற்காகவே, பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தன்னை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் என்றும் கூறியுள்ளார்.

நேற்றுக் காலை 9 மணி தொடக்கம், பிற்பகல் 12 வரை தன்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பவர் தொடர்பான மேலதிக தகவல்களை விசாரணையின் போது ரிஐடி அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர் என்றும், விசாரணைக்குட்படுத்தப்பட்ட இளைஞன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.