SuperTopAds

ஊடகவியலாளர் தரிஷாவின் மடிகணினியை ஆய்வு செய்ய உத்தரவு!

ஆசிரியர் - Admin
ஊடகவியலாளர் தரிஷாவின் மடிகணினியை ஆய்வு செய்ய உத்தரவு!

ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மடிகணினியை ஆய்வு செய்யுமாறும், ஜூன் 4 ஆம் திகதிக்கும், ஜூன் 16ம் திகதிக்கும் இடையில் அதில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியுமாறும் அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம், குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியனின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, மடிகணினி கைப்பற்றப்பட்ட திகதியில் இருந்து நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட திகதிக்கும் இடையில் தரவுகள் சேதமாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து ஜூன் 4ம் திகதி முதல், மடிகணினி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இன்றைய தினம் வரையில் - அதில் மாற்றங்கள் செய்யப்பட்டதா என்பதை கண்டறிய நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.