SuperTopAds

நாடு முழுவதும் அதிரடி சோதனை நடவடிக்கைகள், சுற்றிவளைப்புக்கள் இன்று தொடக்கம் ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் அதிரடி சோதனை நடவடிக்கைகள், சுற்றிவளைப்புக்கள் இன்று தொடக்கம் ஆரம்பம்..!

நாடாளுமன்ற பொது தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்படும் சட்டத்திற்கு மாறான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸாருக்கு சிறப்பு வேலைத்திட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

இது தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரம், விழிப்புணர்வு சீட்டு, வேட்பாளர்களின் உருவப்படங்கள்

கொடிகளை விநியோகித்தல் மற்றும் சட்டவிரோதமான முறையில் காட்சிப்படுத்தல் ஆகியன தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்கள் இன்று முதல் முன்னெக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதில் காவற்துறை மா அதிபரின் பணிப்புரைக்கமைவாக நாடளாவிய ரீதியில் உள்ள காவற்துறை நிலையங்கள் ஊடாக இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வீதித்தடைகள், 

நடமாடும் கண்காணிப்பின் ஊடாக பேருந்து, முச்சக்கரவண்டி, உந்துருளிகள் மற்றும் ஏனைய வாகனங்களில் தேர்தல் சட்டவிரோத தேர்தல் பிரசார காட்சிப்படுத்தல்களை அகற்றுதற்கும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

வேட்பாளர் ஒருவரின் உருவப்படம், விருப்பெண், கட்சியின் சின்னம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்று வாகனங்களில் காட்சிப்படுத்தபட்டிருக்குமாயின் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு மேலதிமாக 

வாகன போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.