வடக்கில் கொரோனா சிகிச்சைக்கான விசேட வைத்தியசாலை..! 15ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் தீவிர எதிர்ப்பு..
கிளிநொச்சி- அக்கராயன் வைத்தியசாலையை வடமாகாண கொரோனா சிகிச்சைக்கான விசேட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தொிவித்து 15 கிராம மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் சமர்பித்துள்ளனர்.
குறித்த வைத்தியசாலையை வடமாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அது தொடர்பில் விசேட கூட்டமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
அதேவேளை, பிரதேச அமைப்புக்களால் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு மகஜர் ஒன்றினை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இதேவேளை இன்று இடம்பெற்ற கலந்துரையாடலிற்கு
ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.