மக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்..! அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
மக்களே அவதானம் டெங்கு காய்ச்சல் பேராபத்தை உண்டாக்கும்..! அலட்சியம் வேண்டாம், 19825 பேர் பாதிப்பு, 22 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழப்பு..

இலங்கையில் கடந்த 5 மாதங்களில் 19825 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, 22 பேர் டெங்கு தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தின்போது டெங்கு தொற்றுக்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய நிலையில் இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கையை காட்டிலும் டெங்கு மரண எண்ணிக்கை 

அதிகமாக உள்ளநிலையில் மக்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் என்றும், டெங்கு தொற்று ஏற்படாமலிருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொதுமக்கள் மேற்கொள்ளுதல் அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020 ஆம் ஆண்டு டெங்கு தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் என்பனவற்றில் முன்னேற்றங்கள் உள்ளன. 2019ஆம் ஆண்டில் டெங்கு நோயினால் 150 பேர் மரணமாகினர். ஒரு லட்சத்து 49 பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை தொற்றுநோய் எதிர்ப்பு பிரிவு, விவசாய நில பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரியுள்ளது.குறிப்பாக களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, அநுராதபுரம், 

பொலன்னறுவை மற்றும் பதுளை மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் என்ற வகையில் கால்களில் புண்கள் உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு டொக்ஸிசிலின் குளிசையை முன்நடவடிக்கையாக பயன்படுத்துமாறு தொற்றுநோய் எதிர்ப்பு பிரிவு கோரியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு