ஜனாதிபதி கோத்தாவுடன் இந்திய தூதுவர் முக்கிய சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு, இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியா-இலங்கை இடையில், எல்லா துறைகளிலும், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, பயங்கரவாதம் போன்ற பொதுவான அச்சுறுத்தல்களை முறியடிக்க, கூட்டாக முயற்சிகளை முன்னெடுத்தல், அனுபவ மற்றும் தகவல் பகிர்வு ஆகியன உள்ளிட்ட பாதுகாப்புத் துறைசார் ஒத்துழைப்புக்களை மேலும் வலுவாக்கும் வழிமுறைகள் குறித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்திய தூதுவர் கோபால் பாக்லேவும், கலந்துரையாடியுள்ளனர்.