SuperTopAds

எலி காய்ச்சல் நாட்டில் ஆபத்தை உண்டாக்கும் வாய்ப்பு..! நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை, உரிய காலத்தில் சிகிச்சை பெற தவறின் மரணம்..

ஆசிரியர் - Editor I
எலி காய்ச்சல் நாட்டில் ஆபத்தை உண்டாக்கும் வாய்ப்பு..! நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை, உரிய காலத்தில் சிகிச்சை பெற தவறின் மரணம்..

இலங்கையில் கொரோனா அபாயத்திற்கு நடுவில் எலி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர் குலரத்னே எச்சரித்துள்ளார். 

அறிகுறிகளைக் கண்டறிந்து மருத்துவ சிகிச்சை பெறத் தவறினால் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டார். 

இதுதொடர்பில் மருத்துவ நிபுணர் குலரத்னே தெரிவித்ததாவது, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோய் மிகவும் பொதுவானது. 

எனினும் இந்த நோய் நாட்டின் பிற பகுதிகளிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் குணமடைகின்றனர். 

எலிகள், பசுக்கள் மற்றும் பன்றிகளில் பொதுவாக இருக்கும் பக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது, விலங்குகளின் சிறுநீரில் இருந்து நீர் 

மற்றும் மண்ணை இந்த நோய்த்தொற்று மாசுபடுத்துவதால் மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறது.பக்டீரியா சுமார் 16 நாள்கள் நீரிலும், 

மண்ணில் சுமார் 24 நாள்களும் வாழக்கூடும். காயங்கள் ஊடாக பக்டீரியா மனிதர்களுக்குள் நுழைகிறது, அல்லது அது வாய் அல்லது கண்களுடன் 

தொடர்புபட்டும் தொற்றுகிறது. அறிகுறிகள் பொதுவாக ஐந்து முதல் 14 நாள்களில் தெரியும். காய்ச்சல், கடுமையான தசை வலிகள், தலைவலி, 

சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், சிவப்பு அல்லது மஞ்சள் நிற கண்கள், வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும் என்றார்.