ஊரடங்கு தளர்வு குறித்து முக்கிய தீர்மானத்திற்கு வருகிறது அரசு..! 23 நாட்களாக சமூக தொற்று இல்லை..

ஆசிரியர் - Editor
ஊரடங்கு தளர்வு குறித்து முக்கிய தீர்மானத்திற்கு வருகிறது அரசு..! 23 நாட்களாக சமூக தொற்று இல்லை..

கொழும்பு, ஹம்பாக ஆகிய அபாய வலயங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது. 

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த மாவட்டங்களிலும் தினமும் 9 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்வு குறித்து பேச்சு நடத்தப்பட்டிருப்பதாக 

அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 23 நாட்களாக நாட்டில் சமூகத்தினிடையே கொரோனா நோயாளர்கள் இனங்காணப்படவில்லை.

இருப்பினும் கம்பஹா – வெலிசற கடற்படை முகாமிலிருந்த சிப்பாய்களும், அதேபோல வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களுகே 

தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டிருந்தனர்.இந்த நிலையில்தான் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 

ஊரடங்கை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Radio