மக்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றனர்..! இது தொடர்ந்தால் நாடு மீண்டும் முடக்கப்படும். சிவில் உடையில் நாடு முழுவதும் பொலிஸார்..
இலங்கையில் ஊரடங்கு சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் பொறுப்பற்ற விதமாக நடந்துகொள்வது கவலையளிப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
மக்கள் இவ்வாறு பொறுப்பற்று நடந்து கொண்டால் நாட்டில் மீண்டும் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் தற்போது தளர்த்தப்பட்டது ஒரு பரீட்சார்த்த தீர்மானம் எனவும் கூறியுள்ளார்.
இன்று காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே தேற்கண்டவாறு கூறியுள்ளார். மக்கள் நேற்று நடந்துகொண்ட விதம் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
பரவலாக மக்கள் தனிமைப்படுத்தும் சட்டம் மற்றும் சமூக இடைவெளி என்பவற்றை கடைபிடிக்கவில்லை. ஆகவே இன்று முதல் சட்டம் கடுமையாக்கப்படும். சிவில் உடைகளில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். என்று அவர் குறிப்பிட்டார்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இது வெறும் பரீட்சார்த்த முறையே என்றும், மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.