SuperTopAds

இன்று உயிரிழந்த பெண் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியானது..! பல மருந்தகங்கள், தனியார் வைத்தியசாலைகள் முடக்கப்படும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
இன்று உயிரிழந்த பெண் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியானது..! பல மருந்தகங்கள், தனியார் வைத்தியசாலைகள் முடக்கப்படும் அபாயம்..

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இன்று உயிரிழந்த பெண் கடந்த 5 வாரங்களாக கொழும்பில் பல மருந்தகங்கள், வைத்தியசாலைகளுக்கு சென்று வந்திருந்த தகவல் தற்போது வெளியாகியிருக்கின்றது. 

கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இந்த தகவலைத் தெரிவித்தார். உயிரிழந்த பெண்ணுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டு ஐந்து வாரங்களாக தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களில் மருந்துகளை பெற்று உட்கொண்டுவந்துள்ளார். 

எனினும் அவரின் நோய் அறிகுறிகள் தீவிரமடைந்ததையடுத்து அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தமது சொந்த வாகனத்தில் சென்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிபெற்றுள்ளார். அதன் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இதையடுத்து அவரின் நோய்த் தொற்று தீவிரமடைந்ததையடுத்து இன்று காலை தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.