இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 8வது நபர் தொடர்பில் வெளியான தகவல்..!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த 8வது நபர் 72 வயதான பெண் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க கூறியிருக்கின்றார்.
குருணாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 721 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து இதுவரை 194 பேர் குணமடைந்துள்ளனர்.