பிரதமருடனான சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு..! 3 முக்கிய விடயங்களை உள்ளடக்கி மகஜரை கையளித்தார் இரா.சம்மந்தன்..
இலங்கையில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஒருங்கிணைந்த வேலைத்திட்ட ம் அவசியம் மற்றும் புதிய அரசியலமைப்பு முயற்சியை மீள ஆரம்பித்தல் மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்தல் உள்ளிட்ட 3 முக்கிய விடயங்கள் அடங் கிய மகஜர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தர ணியுமாறு எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த மகஜரினை இன்று நடைபெற்ற முன்னா ள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கையளித்திருக்கின்றனர்.