தனிமைப்படுத்தலுக்கு 7500 ரூபாய்..! வழங்க தயார் என்றால் நாட்டுக்குள் வரலாம்..
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோர் ஹோட்டல்களில் தங்கவைக்கப்படவிருக்கும் நிலையில், தனிமைப் படுத்தலுக்கான 7500 ரூபாய் பணத்தை அவர்கள் செலுத்த விரும்பினால் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என இராணுவ தளபதியும், கொரோனா எதிர்ப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இராணுவ முகாம்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் தனிமைப்படுத்தப்படுபவர்கள் இதற்காக ஹோட்டல்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.
ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு சம்மதம் தெரிவிக்கும் இலங்கையர்கள் மட்டுமே நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரித்தானியாவிலிருந்து இன்று 260 பேர் நாடு திரும்ப உள்ளதாகவும், இந்த நிலையில் இவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு
நாட்டில் பல பாகங்களிலும் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.மேலும் வழக்கமாக ஒரு நாளைக்கு 20,000 – 35,000 வரை ஹோட்டல் அறை ஒன்று வாடகைக்கு விடப்படும் எனவும், ஆனால் தனிமைப்படுத்தல் காரணத்திற்காக
ஒரு அறைக்கு 7,500 ரூபா அறவிடப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் மட்டுமே நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.