கொரோனா நோயாளிகளை கொண்டு செல்லும் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட அம்புலன்ஸில் சாராயம் கடத்தியவர்கள் கைது..!
அம்புலன்ஸ் வண்டியில் மதுபான போத்தல்களை கடத்தி சென்ற வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபான போத்தல்கள் பறிமுதல் செ ய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சேவாகம காலியங்கல பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்திற்குள் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் 125 சாராயப்போத்தல்கள் காணப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். நோயாளர் காவு வண்டியினை செலுத்திய சாரதி மற்றும் அவரின் உதவியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
என்பதோடு அவர்கள் இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரைணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலநறுவை வைத்தியசாலைக்கு சொந்தமாக குறித்த வண்டி கொரோனா
தொற்றாளர்களை தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.