திடீரென பெய்த மழைக்கு மத்தியில் மின்னல் தாக்கம்..! இளைஞன் பலி, பல இடங்களில் மரங்கள் மீதும் மின்னல் தாக்கம், வவுனியாவில் இன்று மாலை..

ஆசிரியர் - Editor
திடீரென பெய்த மழைக்கு மத்தியில் மின்னல் தாக்கம்..! இளைஞன் பலி, பல இடங்களில் மரங்கள் மீதும் மின்னல் தாக்கம், வவுனியாவில் இன்று மாலை..

வவனியா- நாகர் இலுப்பைகுளம் பகுதியில் திடீர் மழையின்போது மின்னல் தாக்கியதில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தென்னை மரம் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இன்று மாலை திடீரென பெய்த மழையின் போது இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது தென்னை மரமொன்றின் கீழ் நின்ற 25 வயதுடைய பெ.மங்களேஸ்வரன் என்ற இளைஞன் 

மீது மின்னல் தாக்கியதில் மரணமடைந்துள்ளதுடன், தென்னை மரமும் தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவத்தில் மரணமடைந்த ஒரு பிள்ளையின் தந்தயான இளைஞனின் சடலம் 

அன்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியாவில் இடி மின்னல் தாக்கத்தினால் தோணிக்கல்,குளக்கட்டு வீதி உள்ளிட்ட பல

பகுதிகளிலும் இடி மின்னல் தாக்கத்தினால் மரங்கள் முறிந்து வீழ்ந்தும், மரங்கள் எரிந்தும் உள்ளன. 

Ads
Radio
×