வீட்டுரிமை கோரி மலையக இளைஞர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர் - Editor II
வீட்டுரிமை கோரி மலையக இளைஞர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

மலையகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தில் லயன் அறைகளில் வாழ்கின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலர் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் புறக்கோட்டை மத்திய தொடருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

வீட்டுரிமை கோரி மலையக இளைஞர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டமாக 20 ஆயிரம் வீட்டுத் திட்டங்களும், இந்தியாவின் உதவியுடன் 5000 வீடுகளும் அமைக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் இன்றுவரை 2800 வீடுகளே கட்டப்பட்டுள்ளதாக மலைநாட்டு வீடமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் அண்மையில் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தோட்டப் புறங்களில் தொழில்செய்பவர்களைத் தவிர லயன் அறைகளில் வாழ்கின்ற பலருக்கு இந்த வீட்டுத் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

ஏற்கனவே 200 வருடங்களாக லயன் அறைகளில் வாழ்க்கையை கழித்துவரும் மலையக மக்கள் அசமந்தமாக அமைச்சர்களது நடவடிக்கையினால் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அந்த லயன் அறைகளிலேயே வாழ்க்கையை கழிக்கவேண்டிய அசாதாரண சூழ்நிலைக்கு பெருந்தோட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலரை அவர்களது கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பதற்காக அழைத்துச் சென்றிருந்தனர்.

வீட்டுரிமை கோரி மலையக இளைஞர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு