பெண் அதிபர் விவகாரம்: சாட்சிகளை ஆராய்கிறது மனித உரிமைகள் ஆணைக்குழு
ஊவா மாகாண மகளிர் பாடசாலை பெண் அதிபர் முழந்தாளிட வைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூடி ஆராயவுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில், பல்வேறு தரப்பினரிடம் சாட்சியங்களை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சாட்சியங்கள் குறித்து, தற்போது ஆராயந்து வருவதகாவும், இந்த நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி கலந்துரையாட உள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள 7 பேரை நேற்று முன்தினம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்திருந்தது.
ஊவா மாகாண கல்விச் செயலாளர் சந்தியா அம்பன்வல, மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், பதுளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு ஊடகவியலாளர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் அதிபரிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.