இன்றைய நாள் எப்படி - 16 ஆடி 2019 வியாழக்கிழமை

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி - 16 ஆடி 2019 வியாழக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம்

16-08-2019, ஆடி 31, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 08.22 வரை பின்பு தேய்பிறை துதியை. அவிட்டம் நட்சத்திரம் பகல் 10.55 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. காயத்ரீ ஜபம். அம்மன் வழிபாடு நல்லது. 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் - 16.08.2019

மேஷம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.

மிதுனம்

இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் இருப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். அரசு வழியில் அனுகூலம் கிட்டும்.

தனுசு

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.

மகரம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் பண நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணி சுமை குறையும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு