கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

வவுனியா- கற்பகபுரம் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி பலி!

ஆசிரியர் - Admin
வவுனியா- கற்பகபுரம் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி பலி!

வவுனியா- கற்பகபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஆடை தொழிற்சாலைக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள ஹயஸ் ரக வாகனம் முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை சேர்ந்த 25 வயதான சிவபெருமாள் கஜேந்திரன் என்ற இளைஞன் மரணடைந்துள்ளார். ஹயஸ் ரக வாகனத்தையும் முச்சக்கரவண்டியையும் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றதுடன் ஹயஸ் வாகன சாரதியையும் கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

மரணமடைந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Radio
×