மன்னாரில் கஞ்சாப் பொதிகளுடன் படகு சிக்கியது!
மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்று 140.760 கிலோ கஞ்சாவுடன், மீன்பிடிப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. பேசாலை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நங்கூரமிடப்பட்டிருந்த படகு சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பியிருக்கலாம் என்று கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.