இணைய ஊடகவியலாளர் கைதாகி விடுதலை!
வவுனியாவில் தௌஹீத் ஜமாத் பள்ளியை படம் பிடித்ததாக உள்ளுர் இணைய ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளத்தில் இயங்கிவரும் தௌஹீத் ஜமாத் பள்ளியை ஊடகவியலாளர் ஒருவர் படம் பிடித்ததுடன் பள்ளி நிர்வாகிகளிடம் குறித்த பள்ளி பற்றிய தகவல்களை கேட்டறிந்த பின் குறித்த தகவல் இணைய ஊடகங்களில் வெளிவந்திருந்தது.
இதனை தொடர்ந்து குறித்த பள்ளிவாசலின் செயலாளரினால் குறித்த ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் அத்துமீறி புகைப்படம் எடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து நேற்றைய தினம்; ஊடகவியலாளரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, வாக்கு மூலம் பெற்றுக் கொண்டதுடன் ஊடகவியலாளரை விடுவித்துள்ளனர்.
மீண்டும் நேற்றைய தினம் இரவு 10மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்ததுடன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி இருந்தனர். நீதிமன்றில் வழக்கை விசாரித்த நீதிபதி ஊடகவியலாளரை பிணையில் விடுவித்துள்ளார்.
மஹிந்த ஆதரவு சிறிடெலோ ஆதரவு உள்ளுர் இணைய ஊடகவியலாளரே கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.