வற்றாப்பளைக்கு வந்தது சோதனை!

ஆசிரியர் - Admin
வற்றாப்பளைக்கு வந்தது சோதனை!

தெற்கின் குழப்பங்களிற்கு மத்தியில் முல்லைதீவில் தமது பாதுகாப்பு கெடுபிடியை அமுல்படுத்த தொடங்கியுள்ளன இலங்கைப்படைகள். இதன் பிரகாரம் பாதுகாப்பு காரணத்திற்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர பொங்கல் விழாவில் பறவைகாவடி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்திற்கு வருகை தரும் அனைவரும் உடற்சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர பொங்கல் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு தரப்பால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைதீவில் எந்தவொரு குழப்பமும் நடந்தேறியிராத நிலையில் இலங்கைப்படைகளது கெடுபிடிகள் மக்கிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

Radio
×