முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் - போரில் கொல்லப்பட்டவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி!

ஆசிரியர் - Admin
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் - போரில் கொல்லப்பட்டவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு அருகில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக இன்று அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. 

அங்கு போரில் கொல்லப்பட்டவர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் வட மாகணசபை முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், செ.மயூரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Radio
×