அமெரிக்க தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்தும் காஷ்மீர் தீவிரவாதிகள்!
புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி உள்ளதாக இந்திய மத்திய புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்ட முதாசிர் கான் என்பவன் தரல் என்ற இடத்தில் பதுங்கி இருந்த போது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதில்தார், முதாசிர்கான் இருவருமே திறன்பேசி மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்க தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர்.
அந்த போனுக்கு அவர்கள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி உள்ளனர். இதை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். அந்த தொலைபேசியில் இணைய தளம், பேஸ்புக், வாட்ஸ்- அப் சேவைகளையும் பெற்று வைத்துள்ளனர், இச் செய்தி இந்திய அரசாங்கத்துக்கு பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் உதவியை நாடவுள்ளது இந்தியா.