பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் படுகொலை! பெருந்தொகை நிதி சேகரித்த மக்கள்

ஆசிரியர் - Admin
பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் படுகொலை! பெருந்தொகை நிதி சேகரித்த மக்கள்

பிரித்தானியவில் கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த இலங்கை தமிழரின் குடும்பத்திற்காக பெருந்தொகை நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 54 வயதானவர் கடந்த ஞாயிற்கு கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.

வடக்கு லண்டன் Pinner பகுதியிலுள்ள கடையில் வைத்து குறித்த நபர் கொலை செய்யப்பட்டார்.

இறந்தவரின் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்த கொள்ளையர்கள், அங்கிருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இறந்தவரின் இறுதி அஞ்சலிக்காக உதவி கோரப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதி மக்கள் நிதி உதவி பக்கம் ஒன்றை ஆரம்பித்து நிதி சேகரித்து வருகின்றனர்.

உதவி கேட்ட சில மணி நேரங்களில் 9000 பவுண்ட் நிதி சேகரிப்பட்டது. நேற்று இரவு வரை 11,440 பவுண்ட் நிதி கிடைத்த நிலையில் தற்போது வரையில் 24982 பவுண்ட் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் எனவும் அவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த போது அந்த பகுதி மக்கள் அவரது உயிரை காப்பாற்ற போராடியுள்ளனர். எனினும் அவர் 45 நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.

இவரின் மரணத்துடன் சேர்த்து இந்த வருடம் 29 மரணங்கள் லண்டனில் இடம்பெற்றுள்ள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த கொலை தொடர்பில் தகவல் அறிந்தால் தகவல் வழங்குமாறு லண்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு