SuperTopAds

இலங்கையை நோக்கி ஓ. பன்னீர்செல்வம் சூளுரை!

ஆசிரியர் - Editor II
இலங்கையை நோக்கி ஓ. பன்னீர்செல்வம் சூளுரை!

இலங்கைவசமுள்ள படகுகளையும் மீனவர்களை மீட்கவும் உறுதியாக கச்சத்தீவை மீட்டெடுப்போம் என தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ளார்.

இராமேஸ்வரத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள துணை முதல்வர் மீனவர்களின் பிரச்சினை குறித்துப் பேசும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அங்கு பேசிய பன்னீர்செல்வம்,

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தருவதுடன், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, மீட்கப்படாமல் நடுக்கடலில் முழ்கிய படகுகளுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்தும் படகுகளை பறிமுதல் செய்வதாக கூறியுள்ளனர்.

மான்புமிகு அம்மா இருக்கும் போது அவ்வப்போது மத்திய அரசிடம் பேசி மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தியும் நிதி உதவிகளை செய்தும் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுத்துவந்தார்.

தற்பொழுது மத்திய அரசிடம் பேசி இலங்கை கடற்படைவசமுள்ள மீனவர்களையும் படகுகளையும் மீட்டுத்தர முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

புரட்சித்தலைவி அம்மா எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, கச்சதீவு குறித்துப் பேசியிருந்தார். தமிழகத்தின் உரிமை கச்சதீவு. இராமநாதபுரம் மன்னர் சேதுபதி ராஜாவின் நிலம் தான் கச்சதீவு. அதற்குறிய ஆவணங்கள் தமிழக அரசிடம் உள்ளன.

எனவே உச்ச நீதிமன்றம் வரை சென்று வருவாய்துறையினரையும் இணைத்து வழக்கு நடைபெற்றுவருகிறது. நமது நியாயமான வாதங்களை எடுத்துறைத்து வருகின்றோம். நமது முயற்சி தொடரும். எனவே உறுதியாக கச்சதீவை மீட்டெடுப்போம் என்று சூளுரைத்துள்ளார்