மொசம்பிக்கில் இடாய் புயல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 732 ஆக உயர்வு!

ஆசிரியர் - Admin
மொசம்பிக்கில் இடாய் புயல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 732 ஆக உயர்வு!

ஆப்ரிக்க புயலில் 700க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர் மழை காரணமாக நிரம்பி இருக்கும் அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐநா மனிதஉரிமை அலுவலகம் எச்சரித்துள்ளது. 

தெற்கு ஆப்ரிக்க நாடான மொசம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவில் கடந்த வாரம் மணிக்கு 170கிமீ வேகத்தில் இடாய் புயல் வீசியது. இதில் சிக்கி மொசாம்பிக், ஜிம்பாப்வே, மற்றும் மாலவி நாடுகளை சேர்ந்த 732 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலான பகுதிகள் வெள்ளாக்காடாக மாறி இருப்பதால் உணவு, வீடு, குடிநீரின்றி வாடும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நிலைமை மோசமாக இருப்பினும், மீட்பு பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், வீட்டு மேற்கூரை, மரங்களில் தஞ்சமடைந்துள்ள 1500 மக்கள் ஹெலிகாப்டர், படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு வருவதாக நிலம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சர் செல்சோ கொரெய்யா தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு