கடும் குளிரின் பிடியில் கனடாவின் ரொறன்ரோ, ஒன்ராறியோ மாகாணங்கள்!
கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் நேற்று வரலாறு காணாத கடும் குளிரை எதிர்கொண்டிருந்தன. ரொறன்ரோ மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களில் இன்றும் -35 செல்சியஸில் இருந்து -40 செல்லியஸ் வரை குளிர் காலநிலை ஏற்படும் என்றும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் குளிர் காற்றுடன் கூடிய வெப்பநிலை உணரப்படும் என்று கனேடிய சுற்றுச்சூழல் அமைப்பு விசேட காலநிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இக்காலநிலையானது நாளையுடன் மாற்றமடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 59-வருடங்களிற்கு முன்னய வெப்பநிலை சாதனையை முறியடித்து ரொறொன்ரோவில் இன்றய தேதியில் ஆழமான மற்றும் கொடூரமான குளிர் தொடர்கின்றது.
பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 6-மணியளவில் வெப்பநிலை – 23 C ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 1959ல் காணப்பட்ட – 20. 6 C சாதனையை இன்றைய பதிவு முறியடித்துள்ளது. குளிர் காற்றுடன் கூடிய வெப்பநிலை இன்று இரவு பூராகவும் மிகுந்த குளிருடன் – 34 ஆக உணரப்படும்.
நிலைமை விரைவில் எந்த நேரத்திலும் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படவில்லை எனவும் அறியப்படுகின்றது.இன்று பகல் உயர் நிலை – 16 C ஆக உயரும். இரவு – 25 C ஆகும். இருந்தும் குளிர்விக்கும் காற்று – 36ஆக உணர வைக்கும் என கனடா சுற்று சூழல் அறிவிக்கின்றது. சனிக்கிழமை பகல் நேரம் அதி உயர் – 17 C மற்றும் இரவு பூராகவும் – 23 C.ஆக இருக்கும் என வானிலை ஏஜன்சி தெரிவிக்கின்றது.
கனடா சுற்று சூழல் பிரிவினரால் வியாழக்கிழமை விடுக்கப்பட்ட அதி தீவிர குளிர் எச்சரிக்கை நடை முறையில் இருக்கும் எனவும் டிசம்பர் 25ல் ரொறொன்ரோ மருத்துவ அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட அதி தீவிர குளிர் வானிலை எச்சரிக்கையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.