எதியோப்பிய விமான விபத்தில் உயிாிழந்தவா்களின் குடும்பத்திருக்கு 1 கிலோ மண். இறுதிச்சடங்குக்கு வழங்கப்பட்டது..

ஆசிரியர் - Editor
எதியோப்பிய விமான விபத்தில் உயிாிழந்தவா்களின் குடும்பத்திருக்கு 1 கிலோ மண். இறுதிச்சடங்குக்கு வழங்கப்பட்டது..

எத்தியோப்பியாவில், மார்ச் 10 அன்று நடந்த விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருகிய மண் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இறுதி சடங்கு செய்ய கொடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 157 பேரின் உடல் எச்சங்களை அடையாளம் கண்டுபிடிக்க குறைந்தது ஆ று மாத காலம் ஆகும் என்பதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குக ளில் பயன்படுத்தப்படவுள்ள அந்த மண், 

அவர்களுக்கான கல்லறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் புதைக்கப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. தங்கள் உறவினரை இழந்த ஒவ்வொரு குடு ம்பத்துக்கும் ஒரு கிலோ மண் ( a 1kg (2.2lbs) bag of charred soil) கொடுக்கப்பட்டது. 

தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது வெளிநாடுகளில் இருக்கும் அந்த விமான சேவை நிறுவனத்தின் அலுவலகங்களில், 

இறந்தவர்களின் உறவினர்கள் டி.என்.ஏ மாதிரிகளை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Radio
×