மன்னார் புதைகுழி ஆய்வறிக்கை சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது! - ஜெனிவாவில் தடயவியல் நிபுணர்
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி தொடர்பான காபன் ஆய்வறிக்கை சர்வதேச விதிமுறைகளுக்கு புறம்பானது என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்திய தடயவியல் நிபுணர் சேவியர் செல்வா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் ‘புதிய உலக ஒழுங்கின் கீழ் இனவழிப்புகள்’ என்ற தொனிப்பொருளில் நேற்று கருத்தரங்கு இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் மன்னார் மனித புதைகுழியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த இந்திய தடயவியல் நிபுணர் முனைவர் சேவியர் செல்வா சுரேஷ் உரையாற்றினார்.
இதன்போது, மன்னார் மனித புதைகுழி குறித்த காபன் ஆய்வறிக்கை சர்வதேச விதிகளுக்கு முரணானது எனக் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தினால் தமிழீழத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழின அழிப்பு தொடர்பாகவும் இதன்போது பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.