SuperTopAds

3 ஆயிரம் கோழிகளின் பிடியில் சிக்கிய நாி, இறுதியில் பாிதாபகரமாக உயிாிழந்தது. பிரான்ஸ் நாட்டில் நடந்த சுவாரஸ்யம்..

ஆசிரியர் - Editor I
3 ஆயிரம் கோழிகளின் பிடியில் சிக்கிய நாி, இறுதியில் பாிதாபகரமாக உயிாிழந்தது. பிரான்ஸ் நாட்டில் நடந்த சுவாரஸ்யம்..

பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் பண்ணை ஒன்றில் 3 ஆயிரம் கோழிகள் ஒன் று சோ்ந்து நாி ஒன்றை கொன்றுள்ளன. 

பிரிட்டானியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு இளம் நரி, கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

பொதுவாக மூவாயிரம் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பண்ணையின் கூண்டுக்குள் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

நரி உள்ளே நுழைந்தபிறகு கதவுகள் மூடிக்கொண்டன. கோழிகளிடம் சிக்கிய அந்த இளம் நரி அங்கே தனது உயிரைவிட்டது.

கோழிகளிடம் அப்போது ஏற்பட்ட கூட்டு மந்தையுணர்வால் அவை அந்த நரியை குத்திக் கொன்றிருக்கின்றன என்கிறார்

கிராஸ் சீன் விவசாய பள்ளியின் துறை தலைவர் பாஸ்கல் டேனியல். அந்த நரியின் உடல் அடுத்தநாள் கோழிக் கூண்டு பகுதியின் 

மூலையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. 16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா

''அக்கோழிகள் நரியின் கழுத்தில் கொத்தியுள்ளன. நரியின் கழுத்தில் அந்த காயங்கள் தெரிந்தது,'' என ஏ எஃப் பி செய்தி முகமையிடம் டேனியல் கூறியுள்ளார்.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த கோழிப் பண்ணையில் அதிகபட்சம் ஆறாயிரம் பிரீ ரேஞ்ச் கோழிகள் அடைத்து வைக்கப்படலாம்.

கோழிகள் பகல் பொழுதில் கூண்டில் அடைத்து வைக்கப்படாமல் வெளியே நேரத்தை செலவிடும். 

இரவில் மீண்டும் அந்த பெரிய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்படும். பகல் பொழுதில் கூண்டின் கதவுகள் திறந்தே இருக்கும்.

நரி உள்ளே சிக்கிய பிறகு கோழிகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் கூட்டமாக உள்ளே நுழைந்ததை பார்த்து பயந்து போயிருக்கக்கூடும் 

என உள்ளூர் பிராந்திய செய்தித்தாளான குவெஸ்ட் பிரான்ஸிடம் டேனியல் தெரிவித்திருக்கிறார்.